புவி கண்காணிப்பு பணிக்கான ஜிலின் -1 காஒபென் -02F செயற்கைகோளை சீனா விண்ணில் செலுத்தியது.
ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து Kuaizhou-1A ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் இருந்து புவி பாதுகாப்பு குறித்த அதிக தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் அதிவேகத்தில் தரவுகளை அனுப்பக்கூடிய பணிகளை செயற்கைகோள் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.